தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பாக படிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரொக்கப்பரிசு

சிறப்பாக படிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரொக்கப்பரிசு

சிறப்பாக படிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரொக்கப்பரிசு


UPDATED : செப் 07, 2011 12:00 AM

ADDED : செப் 07, 2011 03:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2011 12:00 AM ADDED : செப் 07, 2011 03:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடிக்கும் காதுகேளாத, பேச முடியாத மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு ரூ.18 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பேரவையில் சமூக நலம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிளித்து பேசிய அமைச்சர் செல்வி ராமஜெயம் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் முதல் இடம் பெறுபவருக்கு ரூ.18 ஆயிரமும், 2ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.12 ஆயிரமும், 3ம் இடம் பெறுபவருக்கு 9 ஆயிரமும் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் முதல் இடம் பெறுபவருக்கு ரூ.12 ஆயிரமும், 2ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.7500ம், 3ம் இடம் பெறுபவருக்கு 4500ம் வழங்கப்படும்.

அதேப்போன்று 10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறுபவருக்கு ரூ.12 ஆயிரமும், 2ம் இடம் பெறுபவருக்கு ரூ.9 ஆயிரமும், 3ம் இடம் பெறுபவருக்கு ரூ.6 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும்.

மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவருக்கு 6 ஆயிரமும், 2ம் இடம் பெறுபவருக்கு ரூ.4500ம், 3ம் இடத்திற்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும்.

10ம் வகுப்புக்கு மேல் உயர் கல்வியைத் தொடர ரூ.4 ஆயிரமும், விடுதி கட்டணமாக ரூ.2 ஆயிரமும், பிளஸ் 2 வகுப்புக்கு மேல் உயர் கல்வியைத் தொடர ரூ.6 ஆயிரமும், விடுதிக் கட்டணம் ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us