தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 வினா வங்கி கையேடு விற்பனை

பிளஸ் 2 வினா வங்கி கையேடு விற்பனை

பிளஸ் 2 வினா வங்கி கையேடு விற்பனை


UPDATED : செப் 08, 2011 12:00 AM

ADDED : செப் 08, 2011 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2011 12:00 AM ADDED : செப் 08, 2011 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலூர் : பிளஸ் 2 மாணவர்களுக்கான முக்கிய வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடு கடலூரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடுகளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விற்பனை செய்ய கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் மாவட்ட மாணவர்களுக்காக கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடுகள் நேற்று முன்தினம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில் பிளஸ் 2 உயிரியல் (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்) பாடங்களுக்கான ஆங்கில வழி மாதிரி வினா-விடை ஒரு செட் 290 ரூபாய்க்கும், தமிழ் வழி 310, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு ( ஆங்கில வழி) ஒரு செட் 280 ரூபாய்க்கும் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us