தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தரவரிசை பட்டியலில் இடம்பெற தவறிய இந்திய பல்கலைகள்

தரவரிசை பட்டியலில் இடம்பெற தவறிய இந்திய பல்கலைகள்

தரவரிசை பட்டியலில் இடம்பெற தவறிய இந்திய பல்கலைகள்


UPDATED : செப் 08, 2011 12:00 AM

ADDED : செப் 08, 2011 04:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2011 12:00 AM ADDED : செப் 08, 2011 04:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி.-டெல்லி தரவரிசை பட்டியலில் 218 வது இடத்தை வகிக்கிறது. அதை தொடர்ந்து ஐ.ஐ.டி.-மும்பை 225 வது இடத்திலும், ஐ.ஐ.டி.-சென்னை 281வது இடத்தையும் பிடித்துள்ளது.

தரவரிசை பட்டியலில் சிறந்த கல்வி நிறுவனமாக பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் அதை தொடர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் முன்னணி இடத்தை வகிக்கின்றன.

கடந்த ஆண்டின் நிலவரப்படி ஐ.ஐ.டி.-மும்பை 187வது இடத்தையும், ஐ.ஐ.டி.-டெல்லி 202வது இடத்தையும், ஐ.ஐ.டி.-சென்னை 262வது இடத்தையும் வகித்தன. 

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆங்கில பாட வாரியாக தரவரிசை பட்டியலில் 51வது இடத்தை பெற்று விளங்குகிறது.

க்யூ.எஸ். ஆசியா ரேங்கிங் பட்டியலில் ஐ.ஐ.டி.-கான்பூர், ஐ.ஐ.டி.-டெல்லி, ஐ.ஐ.டி.-சென்னை, ஐ.ஐ.டி.-கராக்பூர் மற்றும் ஐ.ஐ.டி.-ரூர்கி ஆகியவை இடம்பிடித்துள்ளன. ஐ.ஐ.டி.-மும்பை இரண்டு இடங்களிலிருந்து பின் தங்கி உள்ளது.

ஆசியாவில் சிறந்த பல்கலைக்கழகமாக ஹாங்காங் யூனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் விளங்குகிறது. கடந்த ஆண்டு 37வது இடத்தை பிடித்திருந்த ஐ.ஐ.டி.-கான்பூர் இந்த ஆண்டு 36 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us