இடங்கள் குறைப்புக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை: இயக்குநர்
இடங்கள் குறைப்புக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை: இயக்குநர்
UPDATED : செப் 09, 2011 12:00 AM
ADDED : செப் 09, 2011 12:16 PM
சென்னை: தாம்பரத்திலுள்ள சித்த மருத்துவ நிறுவனத்தின் முதுநிலை படிப்பிற்கான இடங்கள் குறைக்கப்பட்டதாக, மத்திய இந்திய முறை மருத்துவ கவுன்சிலிடமிருந்து தகவல் எதுவும் வரவில்லை என்று அந்நிறுவன இயக்குநர்(பொறுப்பு) மாணிக்கவாசகம் தெரிவித்தார்.
தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் முதுநிலை சித்த மருத்துவப் படிப்பு(எம்.டி) இடங்கள் 46 என்பதிலிருந்து 25 என்ற அளவில் குறைக்கப்பட்டதாக மத்திய இந்திய முறை மருத்துவ கவுன்சிலின் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டது. இதனால் மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இதுகுறித்துக் கூறிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர்(பொறுப்பு) மாணிக்கவாசகம், &'இந்த இடக்குறைப்புத் தொடர்பாக, மத்திய இந்திய முறை மருத்துவ கவுன்சிலிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை&' என்றார்.
அவர் மேலும் கூறியதாவது,
&'தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அதற்கான முறையான நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்து வருகிறது&' என்றார்.