தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவ, மாணவிகளுக்கு நெல்லையில் கல்விநிதியுதவி வழங்கல்

மாணவ, மாணவிகளுக்கு நெல்லையில் கல்விநிதியுதவி வழங்கல்

மாணவ, மாணவிகளுக்கு நெல்லையில் கல்விநிதியுதவி வழங்கல்


UPDATED : செப் 12, 2011 12:00 AM

ADDED : செப் 12, 2011 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2011 12:00 AM ADDED : செப் 12, 2011 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு பிராமண சங்க நிர்வாகிகளுக்கு வரவேற்பு மற்றும் கல்விநிதியுதவி வழங்கும் விழா நெல்லையில் நடந்தது. தமிழ்நாடு பிராமண சங்க மாநில தலைவர் சேலம் ஸ்ரீராமன் மற்றும் நிர்வாகிகள் நேற்று நெல்லை வந்தனர். மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு நெல்லை மாவட்ட தாம்பிராஸ் அமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து நெல்லை ஜங்ஷன் தருமபுரம் ஆதீனம் மடத்தில் கல்வி நிதியுதவி வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆலோசகர் கே.எஸ்.சுந்தரம் ஐயர் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர்கள் கீழப்பாவூர் வெங்கடாச்சலம், நாராயணய்யர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கயிலை கண்ணன் வரவேற்றார்.

தாம்பிராஸ் அமைப்பை சேர்ந்த 37 மாணவ, மாணவிகளுக்கு ரூ.75 ஆயிரம் கல்வி நிதியுதவியை மாநில தலைவர் சேலம் ஸ்ரீராமன் வழங்கி பேசுகையில், "இந்திய சுதந்திர போராட்ட விடுதலைக்கு வித்திட்டவர்கள் பிறந்த மண் நெல்லை மாவட்டம்.

சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த பிராமண சமுதாயத்தை சேர்ந்த பாரதியார், வீரவாஞ்சிநாதன் உள்ளிட்டவர்கள் வாழ்ந்த பூமி. பிராமண சங்கம் வளர்ச்சி பெற நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பல பெரியவர்கள் பாடுபட்டுள்ளனர். சேவை உள்ளத்தோடு பணியாற்றக் கூடிய இளைஞர்கள் அதிக அளவில் பிராமண சங்கத்தில் இணையவேண்டும்.

பிராமண சமூக மாணவ, மாணவிகளை நல்ல முறையில் படிக்கவைக்க வேண்டும். திருமணம் முடிக்கும் விஷயத்தில் பிராமண சமூகத்திற்குள்ளேயே பாகுபாடு இருத்தல் கூடாது. சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட இளைஞர்கள் முன்வரவேண்டும். இவ்வாறு தாம்பிராஸ் மாநில தலைவர் சேலம் ஸ்ரீராமன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us