தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களை அடிக்கலாம்: இங்கிலாந்தில் ஆசிரியர்களுக்கு அதிகாரம்

மாணவர்களை அடிக்கலாம்: இங்கிலாந்தில் ஆசிரியர்களுக்கு அதிகாரம்

மாணவர்களை அடிக்கலாம்: இங்கிலாந்தில் ஆசிரியர்களுக்கு அதிகாரம்


UPDATED : செப் 12, 2011 12:00 AM

ADDED : செப் 12, 2011 12:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2011 12:00 AM ADDED : செப் 12, 2011 12:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லண்டன்: ‘மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்க, அவர்கள் மீது கடுமை காட்டுவதில் தவறில்லை. தேவையெனில் உடல்ரீதியான தண்டனையை வழங்கவும் ஆசிரியர்கள் தவற வேண்டாம்,’ என, இங்கிலாந்து நாட்டு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த அதிகளவில் ஆண் ஆசிரியர்களை நியமிக்கவும் அந்நாடு முடிவு செய்துள்ளது.

நாமெல்லாம் வெளிநாடுகளைப் பார்த்து, பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது; உடல்ரீதியான தண்டனை தரக்கூடாது என, விதிமுறைகளைப் புகுத்திக் கொண்டிருக்க, இங்கிலாந்து அதிரடியாய், ஆசிரியர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை அளித்துள்ளது.

கட்டுப்பாடான, ஒழுக்கமான சூழ்நிலைகளில் மாணவர்களை வார்த்தெடுக்கும் விதமாக ஆசிரியர்களுக்கு பல்வேறு சிறப்பு அதிகாரங்களை இங்கிலாந்து கல்வித்துறை வழங்கியுள்ளது. மாணவர்களின் செல்போன்களை சோதனையிடவும், அவற்றில் மோசமான குறுஞ்செய்திகள், படங்கள், வீடியோ, ஆடியோக்கள் இருப்பின் அவற்றை அழித்திடவும் ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களைத் தண்டிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக மோசமான நடத்தையுள்ள மாணவனை அப்புறப்படுத்த முடியும்.

பள்ளிக்கு வெளியே மோசமான நடத்தையில் ஈடுபடும் மாணவன்; மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆசிரியர்களுக்கு எதிராக தவறான  குற்றச்சாட்டை முன்வைக்கும் மாணவன் மீது தலைமையாசிரியர் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும்.  கல்வித்துறை செயலாளர் மைக்கேல் கோவ், இதுதொடர்பான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளார். மாணவர்களை விசாரிக்க தற்போதைய நடைமுறைகள் தடையாக இருப்பதால் இதுபோன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:
மாணவர்களைத் தண்டிக்கும் போது, அவர்களை அடிக்கவும், இப்புதிய அதிகாரம் வகை செய்கிறது. தடை செய்யப்பட்ட பொருட்களை மாணவர்கள் வைத்திருக்கிறார்களா என்பதை  சோதனையிடவும்; õணவனை தனியே இருத்தி வைத்து தண்டனை வழங்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஆண் ஆசிரியர்களை குறிப்பாக ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு பயிற்சி அளித்து, ஆசிரியர்களாக நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. 

எங்களின் பள்ளிச் செயல்முறை தோல்வி அடைந்திருக்கிறது. இளம் குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்க பள்ளிகளில் கடும் நடவடிக்கைகள் அவசியமாகின்றன. ஏதேனும் ஒரு பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம், ‘நாங்கள் மாணவர்களை உடல்ரீதியான தண்டனைக்கு உட்படுத்துவதில்லை’ என்று கூறினால், அது தவறான நடைமுறை; முற்றிலும் தவறானது. விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. கற்பித்தல் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தது. தெளிவான பாடம் புகட்ட, உரிமைகள் மறுக்கப்படாமலிருக்க வேண்டும். இவ்வாறு, மைக்கேல் கோவ் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us