பி.எட். கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவில் உறுப்பினர் நியமனம்
பி.எட். கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவில் உறுப்பினர் நியமனம்
UPDATED : செப் 12, 2011 12:00 AM
ADDED : செப் 12, 2011 03:07 PM
அ நிறம் | அளவு
தனியார் சுயநிதி ஆசிரியர் கல்வி மற்றும் பி.எட். கல்லூரிகளில் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் காஸ்ட் அக்வுன்டன்ட் உறுப்பினராக பி.ஆர். பிரபாகரன் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
சுயநிதி பி.எட். கல்லூரிகளில் மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற நிதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து, தமிழக அரசு அண்மையில் ஆணை பிறப்பித்தது.
இந்தக் குழுவில் காஸ்ட் அக்வுன்டன்ட் உறுப்பினர் இடத்தில், இந்திய காஸ்ட் அக்வுன்டன்ட் நிறுவனத்தின் தென் மண்டல கவுன்சில் தலைவர் பி.ஆர். பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
