UPDATED : செப் 13, 2011 12:00 AM
ADDED : செப் 13, 2011 12:29 PM
காற்று மாசுபாடு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, இயற்கை வளம் பராமரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பள்ளிகளில் உள்ள பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்கள் சார்பில் செப்., 16 ல் &'ஓசோன் தினம்&' கொண்டாடப்பட வேண்டும்.
இதில் மனிதனின் செயல்களான மரக்கட்டைகள், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தல், குளிர் சாதன பெட்டிகளிலிருந்தும், தீயணைப்பு கருவிகளிலிருந்தும் வெளியேறும் குளோரோபுளோரோ கார்பன் வாயு, டூவீலர்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, போன்ற வாயுக்களால் காற்று மண்டலம் மாசு அடைதல், சி.எப்.சி., சி.எச்.4 போன்ற வாயுக்கள் வெளியேற்றத்தினால், ஓசோன் படலம் பாதிக்கப்படுதல் குறித்து மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்துதல். சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் கலந்த காற்று கிடைக்காத சூழல், மாசுபட்ட காற்றை சுவாசிக்கும்போது நுரையீரல் நோய், ஓசோன் படல பாதிப்புகளால் தோல்நோய், கண்பார்வை இழப்பு குறித்து தெரு நாடகங்கள், விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
