தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான வி.ஏ.ஓ. தேர்வு முடிவு வெளியீடு

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான வி.ஏ.ஓ. தேர்வு முடிவு வெளியீடு

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான வி.ஏ.ஓ. தேர்வு முடிவு வெளியீடு


UPDATED : செப் 14, 2011 12:00 AM

ADDED : செப் 14, 2011 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2011 12:00 AM ADDED : செப் 14, 2011 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிராம நிர்வாக அதிகாரி(வி.ஏ.ஓ.,) பதவியில், 3,484 காலியிடங்களுக்கான தேர்வு, கடந்த பிப்., மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம் நடத்தப்பட்டது.

இத்தேர்வை, 9 லட்சத்து, 51 ஆயிரம் பேர் எழுதினர். மொத்தமுள்ள காலியிடங்களில், 1,077 இடங்கள் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.கோர்ட் வழக்கு காரணமாக, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான, 1,077 இடங்களுக்கான முடிவுகள் தவிர, மீதமுள்ள, 2,407 இடங்களுக்கான முடிவுகள், கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us