UPDATED : செப் 15, 2011 12:00 AM
ADDED : செப் 15, 2011 10:01 AM
பிற மாவட்டங்களில் செப்., 16 முதல் 20 வரை நடக்கிறது. செப்., 16 காலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணியிடம் வழங்குதல், மாறுதல், பதவி உயர்வுக்கு கவுன்சிலிங் நடக்கும்.
பிற்பகல் பட்டதாரி, தமிழ் ஆசிரியர்கள் மாறுதல், பதவி உயர்வுக்கு கவுன்சிலிங் நடக்கும். செப்., 17 காலை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணியிட மாறுதல், தலைமை ஆசிரியர் மாறுதல், பதவி உயர்வுக்கும் பிற்பகல் இடைநிலை ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கும்.
செப்., 19 அன்று காலை இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல், பிற்பகல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றிய மாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.
செப்., 20 காலை இடைநிலை ஆசிரியர், பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கான கவுன்சிலிங் நடக்கும் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.
