UPDATED : செப் 19, 2011 12:00 AM
ADDED : செப் 19, 2011 12:05 PM
இந்திய காப்பீட்டுத் துறை என்றால் எல்.ஐ.சி., என்றே பலரும் அறிவர். எல்.ஐ.சி., என்ற பாரத ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் தென் மண்டலத்தில் டைரக்டு சேல்ஸ் எக்சிக்யூடிவ்கள் 532 பேரைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மண்டலத்தில் உள்ள 7 கோட்டங்களில் கோட்ட ரீதியாக இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலி இடங்கள் பற்றிய விபரங்கள்: சென்னை 2 கோட்டத்தில் 81 இடங்களும், திருநெல்வேலி கோட்டத்தில் 53 இடங்களும், கோட்டயம் கோட்டத்தில் 76 இடங்களும், கோழிக்கோடு கோட்டத்தில் 71 இடங்களும், திருவனந்தபுரம் கோட்டத்தில் 82 இடங்களும், திருச்சூர் கோட்டத்தில் 84 இடங்களும், எர்ணாகுளம் கோட்டத்தில் 85 நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: எல்.ஐ.சி.,யின் நேரடி வணிகப் பணிக்கு விண்ணப்பிக்க 01.09.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் மார்க்கெட்டிங், நிர்வாகவியலில் டிப்ளமோ முடித்திருந்தால் நல்லது. அதே போல் ஆங்கிலம் மற்றும் வட்டார மொழியில் ஆளுமை, கம்ப்யூட்டர் ஸ்கில்ஸ் பெற்றிருந்தால் நல்லது.
இதர தகவல்கள்: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக எல்.ஐ.சி.,யின் நேரடி வர்த்தகப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.100/ஐக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தக் கட்டணத்தை ஏதாவது ஒரு எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில் மட்டுமே செலுத்த முடியும். பணத்தை 114034 என்ற அக்கவுன்ட் கோடில் மிஸலேனியஸ் ரிசீப்ட் ஆக செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய பின்னர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்கள் பற்றி அறிய இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்த இறுதி நாள்: 19.09.2011
விண்ணப்பிக்க இறுதி நாள்: 20.09.2011
இணையதள முகவரி: www.licindia.in/pages/
