தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுழைவு தேர்வுக்கான விண்ணப்பம் பெற்று பயனடைய கலெக்டர் அறிவுரை

நுழைவு தேர்வுக்கான விண்ணப்பம் பெற்று பயனடைய கலெக்டர் அறிவுரை

நுழைவு தேர்வுக்கான விண்ணப்பம் பெற்று பயனடைய கலெக்டர் அறிவுரை


UPDATED : செப் 19, 2011 12:00 AM

ADDED : செப் 19, 2011 12:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2011 12:00 AM ADDED : செப் 19, 2011 12:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி : நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அகில இந்திய குடிமை பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் முதல்நிலை தேர்வு பயிற்சிக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு வரும் அக்.,30ம் தேதியன்று நடக்கவுள்ள நுழைவு தேர்வுக்கான விண்ணப்பங்களை பெற்று பயனடையுமாறு கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் மூலமாக வழங்க அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ளது. "ஐசிஆர்" விண்ணப்பங்கள் பெற, மாணவர்கள் வழி முறைகளை பின்பற்ற வேண்டும்.

நுழைவு தேர்வுக்கான விண்ணப்பங்களை பெற விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 27ம் தேதியாகும். விண்ணப்பங்கள் பெறும் மாணவ, மாணவியர் (ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், சீர் மரபினர் மற்றும் இதர வகுப்பினர்) மனுவை பெற எழுத்து மூலமாக கல்வி மற்றும் ஜாதி சான்றிதழ்களின் நகல்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சரிபார்க்க ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதி பட்டப்படிப்பு (பிஏ, ­பி.எஸ்சி, பி.காம், மற்றும் தொழிற் பட்டப்படிப்பான பி.இ., எம்.பி.­பி.எஸ்., பி.டி.எஸ்., பி.வி. எஸ்சி., பி.எஸ்.சி., (அக்ரி) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகள் அனைத்தும்) முடித்திருக்க வேண்டும் மற்றும் கல்வி, வயது, இருப்பிடம் ஆகிய சான்றிதழ்களின் நகல்களை சரிபார்க்க ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 21 வயது உள்ளவர்களாகவும், 30 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33 வயதிற்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

இப்பயிற்சி மையத்தில் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படும், இதர மாநிலத்தை சார்ந்த மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது. விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் வரும் 27ம் தேதி மாலை 5.45 மணியாகும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு, மாவட்ட கலெக்­டர் அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us