தனியார் பல் மருத்துவ கல்லூரி பி.டி.எஸ். இடங்கள் நிரம்பின
தனியார் பல் மருத்துவ கல்லூரி பி.டி.எஸ். இடங்கள் நிரம்பின
UPDATED : செப் 21, 2011 12:00 AM
ADDED : செப் 21, 2011 10:21 AM
தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த 102 இடங்களை நிரப்ப சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற இறுதிகட்ட மருத்துவக் கலந்தாய்வில், அனைத்து இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை பெற்றுவிட்டனர்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 847 பி.டி.எஸ். இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும்.
இவற்றில் செப்டம்பர் மாதம் 12ம் தேதி முடிந்த மூன்றாம் கட்ட கலந்தாய்வில் 745 இடங்கள் நிரம்பின. 102 இடங்கள் காலியாகவே இருந்தன.
இவற்றை நிரப்புவதற்கான இறுதிகட்ட கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.
கலந்தாய்வில் பங்கேற்க கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.சி., எஸ்.சி.ஏ., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கலந்தாய்வில் பங்கேற்று 102 மாணவர்கள் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேர்க்கை பெற்றனர்.
செப்டம்பர் 20ம் தேதியுடன் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை முழுவதுமாக முடிந்துவிட்டது.
