தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விவசாயிகளுக்கான சான்றிதழ் படிப்புகள்

விவசாயிகளுக்கான சான்றிதழ் படிப்புகள்

விவசாயிகளுக்கான சான்றிதழ் படிப்புகள்


UPDATED : செப் 21, 2011 12:00 AM

ADDED : செப் 21, 2011 02:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2011 12:00 AM ADDED : செப் 21, 2011 02:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு பல்கலைக்கழகம் திறந்தவெளி, தொலைதூரக் கல்வி இயக்ககம் வழியாக விவசாயிகளுக்கு இளநிலை பணைத் தொழில்நுட்பம் எனற பட்டப்படிப்பை  அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இளநிலை பணைத் தொழில்நுட்பம் (பி.எ.டெக்.) என்ற பட்டபடிப்பு தமிழில் முதல் முறையாக விவசாயிகளுக்காக வழங்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பப் படிப்பு, விவசாயிகளும் பட்டதாரியாக விளங்கிடவும், அவர்களுடைய தன்னம்பிக்கையை மேம்படுத்தவும், நவீன வேளாண் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தி அதிக விளைச்சல், வருமானம் பெற்றிடும் வகையில் அமைந்துள்ளது.

மேலும், நவீன கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள், தோட்டக்கலை பயிர்களுக்கான நாற்றங்கால் தொழில்நுட்பங்களும், பயிர்பெருக்க முறைகளும், காளான் வளர்ப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்துதல், தரிசு நில மேம்பாடு, தேனீ வளர்ப்பு, திடக்கழிவுகளும் மண்புழு தயாரித்தல் தொழில்நுட்பங்களும் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் படிப்புகளும் விவசாயிகளுக்காக நடத்தப்படுகின்றன.

இது குறித்து மேலும் விவரங்களை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு கேட்டறியலாம். 0422-6611229, 04362-267680 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us