UPDATED : செப் 22, 2011 12:00 AM
ADDED : செப் 22, 2011 03:20 PM
இந்த கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்ற இதர மாநில பல்கலைக்கழக சட்ட மாணவர்கள், தேர்வில் தேர்ச்சி பெற்றும், அவர்களது பல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு தேர்வு முடிவை வெளியிடாததால் டெல்லி பல்கலையில் சேர்க்கை பெற முடியவில்லை.
தேர்வு முடிவு வெளியாவதற்குள், டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்க்கை முடிந்துவிட்டது. இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து செய்த முயற்சியின் விளைவாக, மாணவர்களை சட்ட படிப்பில் சேர்த்துக் கொள்ள டெல்லி பல்கலைக்கழக அறிவித்துள்ளது.
இதையடுத்து மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு திரும்பப் பெறப்பட்டுவிட்டது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த முடிவால் சுமார் 150 மாணவர்கள் மேல் படிப்பு படிக்க வழி ஏற்பட்டுள்ளது.
