தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு கவுன்சிலிங்

அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு கவுன்சிலிங்

அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு கவுன்சிலிங்


UPDATED : செப் 23, 2011 12:00 AM

ADDED : செப் 23, 2011 10:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2011 12:00 AM ADDED : செப் 23, 2011 10:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள, 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு போக, மீதம் 1,653 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் பொது கவுன்சிலிங் மூலம் ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்டன.

தற்போது, அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல், மத்திய மருத்துவப் பணிகள் இயக்ககத்தால், ஒப்படைக்கப்பட்டுள்ள எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, செப்டம்பர் 24ம் தேதி முதல் மூன்று நாட்கள் கவுன்சிலிங் நடக்கிறது.

சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடக்கும் இக்கவுன்சிலிங்கில் பங்கேற்க, கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில், பிரிவு வாரியாக மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

கவுன்சிலிங் அட்டவணை, www.thhealth.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் கிடைக்க பெறாதோர், இணையதளம் மூலம், தங்களுக்கான கவுன்சிலிங் தேதியை அறியலாம்.

"அகில இந்திய இட ஒதுக்கீட்டில்,  ஒப்படைக்கப்பட்டுள்ள இடங்கள் எவ்வளவு என்பது இனிமேல் தான் தெரியவரும்" என, கூடுதல் மருத்துவ கல்வி இயக்குனர் ஷீலா தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us