தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐஐடி-கான்பூரில் இரவு நேர இன்டர்நெட்டிற்கு தடை

ஐஐடி-கான்பூரில் இரவு நேர இன்டர்நெட்டிற்கு தடை

ஐஐடி-கான்பூரில் இரவு நேர இன்டர்நெட்டிற்கு தடை


UPDATED : செப் 26, 2011 12:00 AM

ADDED : செப் 26, 2011 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2011 12:00 AM ADDED : செப் 26, 2011 09:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கான்பூர் நிர்வாகம், மாணவர்கள் இரவு நேரத்தில் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.

ஐஐடி மாணவர்கள் விடுதியில் இரவு நேரத்தில், தங்களது லேப்-டாப்புகளில்  இணையத்தைப் பயன்படுத்தி அதிக நேரம் கண்விழித்திருப்பதால் வகுப்பு நேரங்களில் அதிகமாக சோர்ந்து காணப்படுகின்றனர். இந்த சூழ்நிலை, மாணவர்களின் படிப்பை பாதிக்கும் என்பதால், இரவு நேரத்தில் இணையத்தைப் பயன்படுத்துவதை ஐஐடி நிர்வாகம் தடை செய்துள்ளது.

பாடத்திட்டத்தின் அழுத்தத்தினால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அதிக பாடச் சுமையினால் மாணவர்கள் சிலர் தற்கொலைக்கும் முயன்றுள்ளனர்.

இதனால் நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை ஐஐடி விடுதிகளில் மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்த தடை செய்யப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை பி.டெக். முதலாமாண்டு மாணவர் ஒருவர் ஐஐடி விடுதியிலேயே தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த தற்கொலை 9வது என்பதால், இந்த நடவடிக்கையை ஐஐடி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us