தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னைப் பல்கலை ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு

சென்னைப் பல்கலை ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு

சென்னைப் பல்கலை ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு


UPDATED : செப் 26, 2011 12:00 AM

ADDED : செப் 26, 2011 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2011 12:00 AM ADDED : செப் 26, 2011 10:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்கலையில், கல்விக் குழு கூட்டம் நேற்று முன்தினம், துணைவேந்தர் திருவாசகம் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில், பல்கலை மானியக் குழு நிர்ணயித்துள்ள தகுதியைப் பூர்த்தி செய்யாத ஆசிரியர்கள், மேலும் ஓராண்டுக்குப் பணிபுரிய அனுமதிப்பது என, முடிவு எடுக்கப்பட்டது.

உதவி நூலகர், கல்லூரி நூலகர், உடற்கல்வி இயக்குனர் ஆகியோருக்கும், இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்கலையில் ஆசிரியராகப் பணியாற்ற, தேசிய தகுதித் தேர்வு (என்.இ.டி.), அல்லது மாநில தகுதித் தேர்வில் (எஸ்.இ.டி.,), தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.எச்டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என, 2009ல் பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) நிபந்தனை விதித்தது.

ஆனால், அதற்கு முன்பாக, சென்னைப் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில், மானியக் குழு நிர்ணயித்துள்ள தகுதியைப் பூர்த்தி செய்யாத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மானியக் குழு நிர்ணயித்த தகுதிப்படி பார்த்தால், இப்போது, பல ஆசிரியர்கள் பணியிழக்கும் நிலை ஏற்படும். மேலும், பல படிப்புகளுக்கு, மூடுவிழா நடத்த வேண்டியிருக்கும் என்று கூறி, ஓராண்டுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ், இதழியல், கேட்டரிங் மேலாண்மை, இன்டீரியர் டிசைன் உள்ளிட்ட, 10-க்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகளில், ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us