தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/28 சுயநிதி எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு

28 சுயநிதி எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு

28 சுயநிதி எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு


UPDATED : செப் 26, 2011 12:00 AM

ADDED : செப் 26, 2011 12:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2011 12:00 AM ADDED : செப் 26, 2011 12:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்ட காலியிடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளித்து திரும்ப ஒப்படைக்கப்பட்ட இடங்கள் என அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்ட 39 காலியிடங்களை நிரப்ப செப்டம்பர் 24, 25ம் தேதிகளில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் கலந்தாய்வு நடைபெற்றது.

ஏற்கனவே சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்த மாணவர்கள், இந்த கலந்தாய்வில் பங்கேற்று மறு ஒதுக்கீடு மூலமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர்.

இதனால் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் 28 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாயின. சென்னை வண்டலூரில் உள்ள தாகூர் மருத்துவக் கல்லூரி, மாங்காட்டில் உள்ள ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, போரூர் அருகே உள்ள மாதா மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்றில் மட்டும் இந்த 28 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்விடங்களில் மாணவர்களை சேர்க்க செப்டம்பர் 26ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வில் பங்கேற்று இடங்கள் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 94 மாணவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேப்போல, சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் சிலரும் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு சென்றுவிட்டதால் அங்கு ஏற்பட்டுள்ள 20 காலியிடங்களை நிரப்ப சுமார் 102 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு திங்கட்கிழமை பிற்பகலில் கலந்தாய்வு நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us