பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பில் சேர தேர்வு-சென்னை பல்கலை
பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பில் சேர தேர்வு-சென்னை பல்கலை
UPDATED : செப் 29, 2011 12:00 AM
ADDED : செப் 29, 2011 03:49 PM
அ நிறம் | அளவு
தமிழக உயர்கல்வித் துறை, பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு இணையாகவும், இந்திய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஈடாகவும், உலக அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இணையாகவும் தமிழக பல்கலைக்கழகங்கள் வர வேண்டும் என்று அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில்
, ஆராய்ச்சிப் படிப்புகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பது என்று சென்னை பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.பிஎச்
.டி. படிப்பவர்களின் எண்ணிக்கை அதகிரிக்க வேண்டும், அதே சமயம் அவர்கள் தரமானதாக ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றும் கல்விக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பில மாணவர்கள் சேர்வதற்கு அவர்கள் 3 தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அப்படி தேர்ச்சி பெற்றால்தான் அவர்கள் பிஎச்.டி.யில் சேர பெயரை பதிவு செய்து கொள்ள முடியும்.இந்த புதிய முறையால் ஆராய்ச்சி படிப்பின் தரம் நிச்சயம் மேம்படும்
. பிஎச்.டி. படிப்பவர்கள் வாய்மொழித் தேர்வின்போது வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர்தான் வருவார். மேலும் ஒவ்வொரு 6 மாதமும் அவர்களின் கண்டுபிடிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.இந்த புதிய முறை சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று கவர்னருக்கு அனுப்பப்படும்
. பின்னர் இந்த புதிய முறை நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.