UPDATED : செப் 30, 2011 12:00 AM
ADDED : செப் 30, 2011 12:03 PM
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கியால் நிர்வகிக்கப்படும் சவுத் மலபார் கிராமினா வங்கி வணிக அடிப்படையில் ரீஜனல் ரூரல் வங்கிகளில் மிகவும் பெரியது. வாடிக்கையாளர் சேவை, கிராமப்புற மேம்பாட்டில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
இந்த வங்கியில் 7 இள நிலை அதிகாரிகளையும், 21 அலுவலக உதவியாளர்களையும் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிகளுக்கு மலையாள மொழியில் ஆளுமை உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேவைகள்:
என்.எம்.ஜி.பி., வங்கியின் அதிகாரி மற்றும் உதவியாளர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க 01.08.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும், முறையே 32 அல்லது 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இரண்டு பதவிகளுக்குமே குறைந்த பட்ச கல்வித் தகுதியாக பட்டப்படிப்பை முடித்திருப்பதோடு, கம்ப்யூட்டர் தொடர்புடைய திறமையும் பெற்றிருக்க வேண்டும்.
அக்ரிகல்சர், ஹார்டிகல்சர், பாரஸ்ட்ரி, அனிமல் ஹஸ்பெண்டரி, வெர்டினரி சயின்ஸ், அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங், பிஸிகல்சர், அக்ரிகல்சுரல் மார்க்கெடிங் அண்டு கோ ஆப்பரேஷன், நிர்வாகவியல், சட்டம், பொருளாதாரம், கணக்கியல் போன்றவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கு அதிகாரி பதவிக்கு முன்னுரிமை உள்ளது.
இதர விபரங்கள்:
மலபார் வங்கியின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.550/ம், உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.300/ம் கட்டணமாக செலுத்த வேண்டும். சலுகைகளுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
கட்டணத்தை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்யப்பட்ட சலானின் மூலமாக ஏதாவது ஒரு சிண்டிகேட் வங்கிக் கிளைக்கு சென்று North Malabar Gramin Bank Recruitment Project என்ற பெயரில் உள்ள 42001050000053 என்ற அக்கவுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும்.
பணத்தை செலுத்திய பின்னர் கிடைக்கும் சலானின் ரசீதில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, கையெழுத்திட்டு எழுத்துத் தேர்வுக்கு செல்லும் போது கொண்டு செல்ல வேண்டும். இந்தப் பதவிகளுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கொல்லம், கோட்டயம்,எர்ணாகுளம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 07.10.2011
இணையதள முகவரி: www.nmgbank.com
