தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சித்த, ஆயுர்வேத கல்லூரிகளின் வசதிகள் மேம்படுத்தப்படும்-தமிழக அரசு

சித்த, ஆயுர்வேத கல்லூரிகளின் வசதிகள் மேம்படுத்தப்படும்-தமிழக அரசு

சித்த, ஆயுர்வேத கல்லூரிகளின் வசதிகள் மேம்படுத்தப்படும்-தமிழக அரசு


UPDATED : செப் 30, 2011 12:00 AM

ADDED : செப் 30, 2011 12:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2011 12:00 AM ADDED : செப் 30, 2011 12:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சித்த, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் மாணவ சேர்க்கைக்கு அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இந்த உறுதியை அளித்துள்ளது.

பாளையங்கோட்டையில் இயங்கி வரும் சித்த மருத்துவக் கல்லூரியிலும், நாகர்கோவிலிலும் இயங்கி வரும் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியிலும் அடிப்படை வசதிகள் இல்லை, போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று கூறி இந்திய மருத்துவ முறைக்கான மத்திய கவுன்சில் இந்த கல்வியாண்டில் மாணவ சேர்க்கைக்கு அனுமதி மறுத்துவிட்டது.

இதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது.

இந்த மனு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீத கிருஷ்ணன் அரசு சிறப்பு வழக்குரைஞர் எஸ்.டி.எஸ். மூர்த்தி ஆகியோர் தமிழக அரசு சார்பில் ஆஜரானார்கள்.

மத்திய அரசின் ஆயுஷ் துறை சுட்டிக்காட்டிய குறைகள் அனைத்தும் அக்டோபர் மாதத்திற்குள் நிவர்த்தி செய்யப்படும். ஆசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டு இரு கல்லூரிகளிலும் மாணவ சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்று வழக்குரைஞர்கள் வலியுறுத்தினர்.

மத்திய அரசு வழக்குரைஞர், அரசு நடத்தும் கல்லூரியாக இருந்தாலும், குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படாமல் மாணவ சேர்க்கைக்கு அனுமதி தரக் கூடாது என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழக அரசு அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் அனைத்து வசதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அனைத்து வசதிகளும் நிறைவேற்றியப் பிறகே மாணவ சேர்க்கைக்கு அனுமதிக்க முடியும் என்று உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us