தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்விக்கடன் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கல்விக்கடன் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கல்விக்கடன் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


UPDATED : அக் 03, 2011 12:00 AM

ADDED : அக் 03, 2011 08:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2011 12:00 AM ADDED : அக் 03, 2011 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இவ்வாறு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களில் பலருக்கு கல்லூரிகளில் இடம் கிடைத்தும், குடும்ப சூழ்நிலை காரணமாக கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இம்மாணவர்களுக்கு கல்விக்கடன், உதவியாக இருக்கிறது.

கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த ஐந்தாண்டுகளில், இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என இந்திய வங்கி கூட்டமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியா முழுவதும் உள்ள 28 தேசிய வங்கிகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, 2009-2010 கல்வி ஆண்டில் 3 லட்சத்து 24 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

அதே சமயம் 2004-2005 கல்வி ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 48 ஆயிரம் மட்டுமே என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்கு முன்பை விட தற்போது அதிகளவில் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்திருப்பது மற்றும் கல்விக்கடன் பெறுவதற்கான தகுதிகள் மற்றும் நடைமுறைகள் தற்போது எளிதாக்கப்பட்டுள்ளதே காரணம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us