UPDATED : அக் 06, 2011 12:00 AM
ADDED : அக் 06, 2011 02:25 PM
கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் துறையில் நல்ல வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் மல்டிமீடியா டிப்ளமோ படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒரு வருட கால மல்டிமீடியா டிப்ளமோ படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது குறித்து வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் முருகேசபூபதி கூறுகையில், தற்போது துவக்கப்பட்டுள்ள மல்டிமீடியா டிப்ளமோ படிப்பு வாயிலாக 2டி, 3டி அனிமேஷன் நுட்பங்களை நுண்கலை மற்றும் வடிவமைப்புத் துறைகளில் தேர்ந்த வல்லுனர்களைக் கொண்டு இந்த படிப்புக்கான பாடங்கள் நடத்தப்படும் என்றார். இது குறித்து பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குநர் வள்ளுவபாரிதாசன் கூறும் போது, இதற்கான பாடத்திட்டம் அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதுமை கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய மாணவர்களுக்கு இப்படிப்பு பயனுள்ளதாக இருக்கும். 2 பருவங்களைக் கொண்ட ஓராண்டு கால படிப்பில் ஒவ்வொரு பருவத்திலும் 40 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம், வேளாண் பல்கலைக்கழகம், கோவை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என்றார்.
