சித்த, ஆயுர்வேத படிப்புகளுக்கு அக்டோபர் 13 முதல் கவுன்சிலிங்
சித்த, ஆயுர்வேத படிப்புகளுக்கு அக்டோபர் 13 முதல் கவுன்சிலிங்
UPDATED : அக் 07, 2011 12:00 AM
ADDED : அக் 07, 2011 10:33 AM
இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு: இக்கல்வியாண்டுக்கான (2011-2012) பி.எஸ்.எம்.எஸ்., சித்தா, பி.ஏ.எம்.எஸ்., ஆயுர்வேதம், பி.என்.ஓய்.எஸ்., இயற்கை, யோகா, பி.யு.எம்.எஸ்., யுனானி, பி.எச்.எம்.எஸ்., ஓமியோபதி ஆகிய மருத்துவ பட்டப் படிப்புகளில், மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஒற்றை சாளர முறை கலந்தாய்வு, வரும் 13ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெறும். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள தேர்வு அலுவலகத்தில் இக்கவுன்சிலிங் நடக்கும். இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தனித்தனியே அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத தகுதியான மாணவர்கள், தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணைப்படி அவரவர்க்குரிய தர வரிசைப்படி கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மாணவர்கள் கவுன்சிலிங்குக்கு வரும்போது, அனைத்து அசல் சான்றிதழ்கள் அல்லது பிற கல்லூரிகளில் படித்து வருவதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும். மேலும், கட்டணத்துக்காக 5,500 மதிப்பில், அக்., 1 க்கு பின் பெறப்பட்டு, சென்னையில் மாற்றத்தக்க, தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலையை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை என்ற பெயரில் எடுத்து வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு
