UPDATED : அக் 07, 2011 12:00 AM
ADDED : அக் 07, 2011 12:15 PM
இந்தியாவில் மாணவர்களுக்கு பாதி விலையில் கம்ப்யூட்டர்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டது. இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக 1 லட்சம் கம்ப்யூட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிலேயே மிகக் குறைந்த விலையில் விற்கப்பட உள்ள இந்த கம்ப்யூட்டருக்கு ஆகாஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது. விழாவில் பேசிய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல்,
இந்த கம்ப்யூட்டர்கள் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்த வருகிறது" என்று கூறினார்.
