மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் நெகடிவ் மதிப்பெண் வேண்டாம்
மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் நெகடிவ் மதிப்பெண் வேண்டாம்
UPDATED : அக் 07, 2011 12:00 AM
ADDED : அக் 07, 2011 04:23 PM
அ நிறம் | அளவு
மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவால் நியமிக்கப்பட்ட கல்வியாளர்கள் குழு, ஏற்கனவே மருத்துவ பொது நுழைவுத் தேர்வின் கேள்வித்தாள் சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தது.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு
(என்.இ.இ.டி.) என்று அழைக்கப்படும் இந்த தேர்வினை நடத்துவது குறித்து அறிக்கையை கல்வியாளர்கள் குழு மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவிடம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.கல்வியாளர்களின் முடிவு ஏற்றுக் கொள்ளப்படும்பட்சத்தில்
, மருத்துவ நுழைவுத் தேர்வில் நெகடிவ் மதிப்பெண்கள் பெறாமல், பல மாணவர்கள் நல்ல மதிப்பெண் விகிதத்துடன் தேர்ச்சி பெறுவார்கள். இதனால் இந்தியாவில் சேர்க்கை முடிந்து, காலியாக உள்ள பல மருத்துவ இடங்கள் நிரம்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கட்
-ஆப் விகிதம் குறைவதற்கும் இந்த முறை வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.