தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எச்.இ.எல்., நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி

பி.எச்.இ.எல்., நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி

பி.எச்.இ.எல்., நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி


UPDATED : அக் 08, 2011 12:00 AM

ADDED : அக் 08, 2011 02:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2011 12:00 AM ADDED : அக் 08, 2011 02:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பி.எச்.இ.எல்.,) என்ற பெல் நிறுவனம் அரசுத்துறை சார்ந்த பிரம்மாண்டமான நிறுவனமாகும். நவரத்னா பொதுத் துறை நிறுவனமாகிய பி.எச்.இ.எல்., இந்தியப் பொருளாதாரத் துறையின் முக்கிய பிரிவுகளான பவர் ஜெனரேஷன், டிரான்ஸ்போர்டேஷன், ரெனிவபிள் எனர்ஜி, பாதுகாப்புத் துறை ஆகியவற்றுக்குத் தேவையான பல முக்கிய பொருட்களைத் தயாரிப்பதற்கு பெயர் பெற்றது.

நாடெங்கும் இந்த நிறுவனத்திற்கு பல இடங்களில் உற்பத்தி மையங்களும் இதர அலுவலகங்களும் உள்ளன. இந்த நிறுவனத்தில் கேட் (GATE - 2012) அடிப்படையில் இன்ஜினியர்ஸ் டிரெய்னி காலி இடங்கள் 800ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிவுகள்:
பி.எச்.இ.எல்., நிறுவனத்தில் மெக்கானிகல் பிரிவில் 550 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 175 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 75 இடங்களும் சேர்த்து மொத்தம் 800 இன்ஜினியர்ஸ் டிரெய்னி பணி இடங்கள் நிரப்பப் பட உள்ளன.

தேவைகள்:
01.08.2012 அன்று 27 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற போதும் கல்வித் தகுதி அடிப்படையில் சில சலுகைகள் உள்ளன. விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க GATE - 2012 மதிப்பெண்கள் கட்டாயத் தேவையாகும்.

இந்த மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தே தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துறைக்கு தகுந்தபடி குறைந்த பட்சம் 4 ஆண்டு காலம் படிக்கக் கூடிய பட்டப் படிப்பை இன்ஜினியரிங்கில் முடித்திருக்க வேண்டும். இந்தப் பதவியில் தேர்ந்தெடுக்கப்பட்டால் ரூபாய் 2 லட்சத்திற்கான பிணையப்பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும்.

இதர தகவல்கள்:
பி.எச்.இ.எல்., நிறுவனத்தின் காலி இடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் முழுமையான தகவல்களை அறியவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 17.10.2011

இணையதள முகவரி: http://careers.bhel.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us