தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கில மொழி கற்பித்தலில் டிப்ளமோ

ஆங்கில மொழி கற்பித்தலில் டிப்ளமோ

ஆங்கில மொழி கற்பித்தலில் டிப்ளமோ


UPDATED : அக் 08, 2011 12:00 AM

ADDED : அக் 08, 2011 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2011 12:00 AM ADDED : அக் 08, 2011 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆங்கிலத்தின் அவசியத்தை இன்றைய தலைமுறை நன்கு உணர்ந்துள்ளது. வேலைக்குச் சென்று கொண்டிருப்பவர்கள் கூட, தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள ஆங்கிலம் பயிற்றுவிக்கும் மையங்களை நாடுகின்றனர்.

ஆங்கிலம் கற்பித்தலில் டிப்ளமோ படிப்பை (Diploma in Teaching English) சிம்பியாசிஸ் தொலைநிலைக் கல்வி மையம் வழங்குகிறது. ஓராண்டு படிப்பான இதில் சேர, 16 வயது நிரம்பியிருக்க வேண்டும். பிளஸ் 2வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடந்த ஜூலை மாதம் இப்பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பயிற்சிக் கட்டணமாக 7,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பாடத்திட்டம் ஆங்கிலம் கற்பித்தல் திறனை மேம்படுத்துகிறது. தொடக்க, இடைநிலை, உயர்நிலை, இளநிலைப் பட்டம் போன்ற படிப்படியான அளவில் ஆங்கிலச் சொற்களின் சேகரம் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துகிறது.

ஆங்கிலம் படித்தல், எழுதுதல், மொழியின் கட்டமைப்புகளை விளக்குகிறது. இப்பாடத்திட்டம் பாடத்துக்கும் செயல்முறை விளக்கத்துக்கும் இணைப்புப் பாலமாகச் செயல்படுகிறது. மேலும் விவரங்களுக்கு www.scdl.net என்ற இணைய முகவரியில் பார்வையிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us