UPDATED : அக் 10, 2011 12:00 AM
ADDED : அக் 10, 2011 12:34 PM
ராஜா ராமண்ணா அதிநவீன தொழில்நுட்ப மையத்தில் பணி வாய்ப்புகள்
இந்திய அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் மும்பையிலுள்ள பாபா அணுசக்தி மையத்தின் லேசர் மற்றும் ஆக்சிலரேட்டர் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ராஜா ராமண்ணா அதி நவீன தொழில் நுட்ப மையம் (ஆர்.ஆர்.சி.ஏ.டி.,) நிறுவப்பட்டது.
1984ல் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மையம் அதே ஆண்டு மே மாதம் முதல் செயல்படத் துவங்கியது. இவ்வளவு பிரசித்தி பெற்ற இந்த மையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் மொத்தம் 57 ஸ்டைபண்டரி டிரெய்னி காலி இடங்கள் பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன.
பிரிவுகள்:
முதல் பிரிவில் இயற்பியலில் 14 இடங்களும், மெக்கானிகலில் 6 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில்10 இடங்களும் காலியாக உள்ளன. இரண்டாவது பிரிவில் எலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ரூமென்டேஷன் ப்ரிவில் 10 இடங்களும், மெஷினிஸ்ட்/மில்லர் பிரிவில் 2 இடங்களும், பிட்டர் பிரிவில் 11 இடங்களும், டர்னர் பிரிவில் 2 இடங்களும், லேபரட்டரி பிரிவில் 2 இடங்களும் காலியாக உள்ளன.
தேவைகள்:
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி தேவைப்படும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். பிரிவு 1க்கு விண்ணப்பிப்பவர்கள் 17.10.2011 அன்று 19 முதல் 24 வயது உடையவராகவும், பிரிவு 2க்கு விண்ணப்பிப்பவர்கள் அதே தேதியில் 18 முதல் 22 வயது உடையவராகவும் இருக்க வேண்டும்.
இந்தப் பதவிகளுக்கு இரண்டு ஆண்டுகால பயிற்சி இருக்கும். பயிற்சியின் போது முதல் பிரிவுக்கு மாதம் ரூ.9 ஆயிரத்து 300ம், இரண்டாவது பிரிவுக்கு மாதம் ரூ.6 ஆயிரத்து 200ம் ஸ்டைபண்டாக வழங்கப்படும். இந்தப்பதவிக்குத் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் பிணைய ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டியிருக்கும்.
இதர தகவல்கள்:
பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே ஆர்.ஆர்.சி.ஏ.டி., அமைப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு விண்ணப்பத்தில் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவு அல்லது விரைவு தபால் மூலமாகப் பின் வரும் முகவரிக்கு 17.10.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள் குறித்த முழுவிபரங்களுக்குப் பின்வரும் இணையதளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.
முகவரி:
Administrative Officer-III,
Raja Rammanna Centre for Advanced Technology,
PO : CAT,
Indore - 452013.
இணையதள முகவரி: http://www.rrcat.gov.in/hrd/advt/catstieng2011.pdf
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 17.10.2011
