தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள்

மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள்

மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள்


UPDATED : அக் 11, 2011 12:00 AM

ADDED : அக் 11, 2011 09:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2011 12:00 AM ADDED : அக் 11, 2011 09:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்தயாரிப்பு குறித்து எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து, சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் 55 பேர் இணைந்து, 1.5 கோடி ரூபாய் செலவில் சிறிய ரக செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து 12ம் தேதி இச்செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு, பூமியிலிருந்து 867 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் இச்சிறிய ரக செயற்கைக்கோளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இஸ்ரோ நிறுவனத்திற்கும், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்திற்கும் இடையே 2009ம் ஆண்டு கையெழுத்தானது. இப்பணிக்கு இஸ்ரோ நிறுவனம் சில கருவிகளையும், உதிரி பாகங்களையும் வழங்கியது.

இச்செயற்கைக்கோளின் வடிவமைப்பு, அதை விண்ணில் ஏவுவதற்கான தெர்மல் சக்தி, மின் ஆளுகை, இதற்காக பொருத்தப்படும் கம்ப்யூட்டர், பூமிக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொலை உணர்தல் போன்ற ஒவ்வொரு பணியையும் மாணவர்கள் தனித்தனி குழு அமைத்து, திட்டமிட்டு உருவாக்கியுள்ளனர்.

இதன் ஆரம்ப வடிவமைப்பை, பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் அதன் அதிகாரிகள் சீராய்வு செய்தனர். இது, பூமியில் உள்ள நச்சு வாயுக்கள் மற்றும் தண்ணீரை விண்ணிலிருந்து ஆய்வு செய்து, இதன் மூலம் கிடைக்கும் தகவல்களை பிற நிறுவனங்களுக்கு அளிப்பது போன்றவற்றை செய்யவல்லது.

கூம்பு வடிவில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 10.4 கிலோ கிராம் எடையுள்ளது. வருங்கால நானோ செயற்கைக்கோள்கள் மற்றும் எஸ்.ஆர்.எம்., செயற்கைக்கோள் ஆகியவற்றின் லட்சிய முகடுகளை நினைவில் கொண்டு இச்செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பச்சமுத்து கூறினார்.

இச்சந்திப்பில், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ, தலைவர் சத்யநாராயணா, ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குனர் நாராயணராவ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us