தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு : மொழிபெயர்ப்பு கேள்வியை நீக்க பரிந்துரை

10ம் வகுப்பு : மொழிபெயர்ப்பு கேள்வியை நீக்க பரிந்துரை

10ம் வகுப்பு : மொழிபெயர்ப்பு கேள்வியை நீக்க பரிந்துரை


UPDATED : அக் 13, 2011 12:00 AM

ADDED : அக் 13, 2011 10:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2011 12:00 AM ADDED : அக் 13, 2011 10:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அதில், ஆங்கிலம் இரண்டாள் தாள் கேள்வித்தாளில், தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பகுதி மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்பதால், இந்த கேள்வியை நீக்கிவிடலாம் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாதிரி கேள்வித்தாள் குறித்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து, அதன் அடிப்படையில் உரிய திருத்தங்களை கொண்டுவர, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக, கருத்துக்களை கேட்டு, அறிக்கை அளிக்கும் பொறுப்பு, சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நாகராஜ முருகன், விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் குப்புசாமி, ஆகியோரிடம் வழங்கப்பட்டது. இவர்கள் இருவரும், கருத்துக்களை கேட்டறிந்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குனரிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

இதில், தமிழ் மற்றும் ஆங்கில பாட கேள்வித்தாளில், பல்வேறு மாற்றங்களைச் செய்ய, அதிகாரிகள் குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. தமிழில், அதிகளவில் விடை அளிக்கும் வகையிலான கேள்விகள் இடம்பெறுவதை குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலம் இரண்டாம் தாளில், 68வது கேள்வியாக, தமிழில் கொடுக்கப்பட்ட பத்தியை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க என, இடம்பெற்றுள்ளது. வழக்கமாக, ஆங்கிலத்தில் இருந்து, தமிழில் மொழி பெயர்க்கும் வகையில் தான் கேள்வி இடம்பெறும். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் புதிதாக தயாரிக்கப்பட்ட மாதிரி கேள்வித்தாளில், தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வகையில் கேள்வி அமைத்துள்ளனர்.

இந்த முறையிலான கேள்விக்கு, விடை அளிக்க மாணவர்கள் சிரமப்படுவர் என்பதால், இந்த கேள்வியை நீக்கிவிடலாம் என, பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது, 5 மதிப்பெண் கேள்வியாகும்.

இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, அதிகாரி ஒருவர் கூறும்போது, "தமிழில் மொழிபெயர்ப்பு வைத்தால், பெரும்பாலான மாணவர்கள் ஓரளவு புரிந்துகொண்டு மொழிபெயர்ப்பு செய்வர். ஆனால், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கக் கூறினால், நகரங்களில் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே, மொழிபெயர்ப்பு செய்ய முடியும்" என்றார்.

மேலும், "கிராமப்புற பகுதிகளைச் சார்ந்த பள்ளிகளில் பயிலும் பெரும்பான்மையான மாணவர்களால் மொழிபெயர்ப்பு செய்ய முடியாது. எனவே, இந்த கேள்வியை நீக்கலாம்" என்றார்.

அதிகாரிகள் வழங்கிய பரிந்துரை அறிக்கை மீது, அரசின் ஆலோசனையைப் பெற்று, அதனடிப்படையில் உரிய முடிவை எடுக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசின் ஒப்புதலுக்குப்பின், கேள்வித்தாளில் செய்யப்படும் திருத்தங்கள் குறித்து, அறிவிப்பு செய்யப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us