UPDATED : அக் 13, 2011 12:00 AM
ADDED : அக் 13, 2011 12:13 PM
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு முறையால் 40 சதவீத மாணவர்கள் தோல்வியடைந்தது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 27 மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற சுமார் 40 விழுக்காடு மாணவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு முறையால் தோல்வி அடைந்துள்ளனர். இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதி மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் பல்கலைக்கழகம் புதிய விதியை நடைமுறைப்படுத்தியுள்ளது கண்டனத்துக்குரியது. எனவே, மருத்துவ மாணவர்களின் தேர்வு பிரச்சினை தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
