தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சித்த மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு துவக்கம்

சித்த மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு துவக்கம்

சித்த மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு துவக்கம்


UPDATED : அக் 13, 2011 12:00 AM

ADDED : அக் 13, 2011 03:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2011 12:00 AM ADDED : அக் 13, 2011 03:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க சென்னை அரும்பாக்கத்தில் கலந்தாய்வு துவங்கியது.

அக்டோபர் 13ம்தேதி காலையில் சென்னை அரும்பாக்கம் இந்திய மருத்துவ முறை ஆணையர் அலுவலக வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வில் சித்தா (பி.எஸ்.எம்.எஸ்.), ஆயுர்வேதம் (பி.ஏ.எம்.எஸ்.), யுனானி (பி.யு.எம்.எஸ்.), ஹோமியோபதி (பி.எச்.எம்.எஸ்.) இயற்கை மருத்துவம்-யோகா பட்டப்பப்பு (பி.என்.ஒய்.எஸ்.) ஆகியவற்றில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 50 பி.எஸ்.எம்.எஸ். இடங்கள், அரும்பாக்கம் அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் உள்ள 26 பி.யு.எம்.எஸ். இடங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வில் எடுத்த கட்-ஆப் மதிப்பெண் 197-ல் துவங்கி மொத்தம் 1,141 மாணவர்களைக் கொண்ட தரவரிசைப் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதில் இருந்து மொத்தம் 800 மாணவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமையன்று சிறப்புப் பிரிவு, பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். இதில் பங்கேற்க 200 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us