UPDATED : அக் 14, 2011 12:00 AM
ADDED : அக் 14, 2011 04:22 PM
15க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படித்து வந்த இந்த படிப்புகளை, பயனற்றதாகக் கருதி பல்கலை நிர்வாகமே நீக்கிவிட்டது.
அவ்வாறு நீக்கப்பட்ட பாடப்பிரிவுகள் குறித்து பல்கலை துணை வேந்தர் திருவாசகம் கூறுகையில், ஒரு சில பாடப்பிரிவுகள் உலகம் முழுவதும் உள்ள மணவர்களில் 3 பேரின் கவனத்தை மட்டுமே கவர்ந்துள்ளது. அதுபோன்ற பாடப்பிரிவுகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது.
குறைவான மாணவர்களுடன் செயல்படும் படிப்புகளை நடத்துவது பல்கலை நிர்வாகத்திற்கு கடினமாக வேலையாகும். ஆகவே இப்படிப்புகள் நீக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அதிகளவில் விரும்பி படிக்கும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர்கள் எளிதாக சேரும் வகையில் நடைமுறைகளை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இனி வருங்காலத்தில் புதிதாக பாடப்பிரிவுகளை சேர்க்கும் போது அது எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறும் என்று ஆராய்ந்து பிறகே அறிமுகப்படுத்தப்படும் என்று துணை வேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், 1981ம் ஆண்டு 15,000 மாணவர்களுடன் துவக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகத்தில் தற்போது 1.5 லட்சம் மாணவர்கள் பயில்கிறார்கள். இதில் மொத்தம் 97 படிப்புகள் கற்பிக்கப்படுகிறது. 26 இளநிலை பட்டப்படிப்பு, 24 முதுகலை பட்டப்படிப்பு, 17 தொழிற்கல்வி படிப்பு, 20 டிப்ளமோ மற்றும் 10 சான்றிதழ் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.
நீக்கப்பட்ட படிப்புகளின் விவரம் வருமாறு
சான்றிதழ் படிப்புகள் : மெடிசினல் பிளான்ட்ஸ், பிடோகெமிக்கல் டெக்னிக்ஸ், சமஸ்கிருதம், பிரெஞ்ச், ஜெர்மனி படிப்புகளாகும்.
டிப்ளமோ படிப்புகள் : சமஸ்கிருதம், பிரெஞ்ச், ஜெர்மன், உழைப்பாளர் சட்டம், மழை நீர் சேகரிப்பு படிப்புகளாகும்.
