தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வியில் இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பு

உயர்கல்வியில் இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பு

உயர்கல்வியில் இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பு


UPDATED : அக் 15, 2011 12:00 AM

ADDED : அக் 15, 2011 02:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2011 12:00 AM ADDED : அக் 15, 2011 02:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உயர்கல்வியில் ஆய்வு, திறன் மேம்பாடு, மாணவர்கள், ஆசிரியர்கள் பரிவர்த்தனை, ஆய்வக பரிவர்த்தனை உள்ளிட்டவற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கல்விக்கான முதல் உச்சி மாநாடு இந்தியா, அமெரிக்காவுக்கு இடையே வாஷிங்டனில் நடைபெற்றது. உச்சி மாநாட்டிற்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன.

அதில், உயர்கல்வியில் இருநாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பு தர முடிவெடுக்கப்பட்டுள்ளது. உச்சி மாநாட்டை ஆண்டு தோறும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் பயன்பெறும் துறைகள் இனம் காணப்பட்டு அதில் இருநாட்டு கல்வியாளர்கள், தனியார், அரசு துறை பிரதிநிதிகள் இடம்பெறும் உயர்கல்வி மேம்பாட்டுக்கான வழிமுறைகளை வகுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சி மாநாட்டிற்குப் பிறகு பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், இந்தியாவில் உள்ள தகுதி வாய்ந்த கல்வி நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு அமெரிக்க நிறுவனங்களுடனான தொடர்பை ஏற்படுத்தி தருவது போன்ற பணிகளைச் செய்யவும், கூட்டறிக்கையில் உள்ள விஷயங்களை நிறைவேற்றவும் ஒரு அமைப்பு துவங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் ஆசிரியர்கள், இளநிலை ஆய்வாளர்களை அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்களுக்கு அனுப்ப இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us