UPDATED : அக் 17, 2011 12:00 AM
ADDED : அக் 17, 2011 11:26 AM
அ நிறம் | அளவு
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில், இந்த ஆண்டிற்கான சிறந்த பல்கலைக்கழகமாக டில்லி பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா டுடே நாளிதழ் 2011ஆம் ஆண்டின் சிறந்த இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கான சர்வே நடத்தியது. கல்லூரியின் பெயர், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், உள்கட்டமைப்பு வசதி, கல்லூரியின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடந்தது. இதில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களை பெற்றுள்ளன.
சென்னை பல்கலைக்கழகம் ஐந்தாம் இடத்தையும், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் 18 வது இடத்தையும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் 30வது இடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம் 37வது இடத்தையும் பெற்றுள்ளன.
