தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரயில்வே கடைநிலை ஊழியர்களுக்கான எழுத்துத் தேர்வு

ரயில்வே கடைநிலை ஊழியர்களுக்கான எழுத்துத் தேர்வு

ரயில்வே கடைநிலை ஊழியர்களுக்கான எழுத்துத் தேர்வு


UPDATED : அக் 17, 2011 12:00 AM

ADDED : அக் 17, 2011 12:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2011 12:00 AM ADDED : அக் 17, 2011 12:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற 4,000 ரயில்வே கடைநிலை ஊழியர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் 30,000 பேர் பங்கேற்றனர்.

தெற்கு ரயில்வேயில் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை, ரயில்வே பணிமனை, ரயில்வே மருத்துவமனை உட்பட பல்வேறு துறைகளில் குரூப்-டி பிரிவைச் சேர்ந்த கடைநிலை ஊழியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில் ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உடல் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட 30,000 பேர், எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு சென்னையில் சுமார் 60 தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் ஒரு மொழியில் வினாத்தாளை பெற்று தேர்வர்கள் தேர்வெழுதினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us