UPDATED : அக் 18, 2011 12:00 AM
ADDED : அக் 18, 2011 11:13 AM
வரும் 2015ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் பெருக உள்ளது என்று நாஸ்காம் கணித்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியில் மின்னணு அறிவியல் அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் து
விழாவில் அவர்கள் பேசுகையில், எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் ஒவ்வொரு ஆண்டும் 98 லட்சம் பேர் பட்டம் பெற்று வெளியே வருகிறார்கள். அவர்களில் அதிகபட்சமாக 40 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே நல்ல வேலை கிடைக்கிறது. திறமையில்லாத மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.
எனவே, எலக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் அத்துறையில் உள்ள அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களது திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 2015ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த துறையில் 6,80,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று நாஸ்காம் அமைப்பு கணித்துள்ளது.
எனவே மாணவர்கள் தங்களை பணிக்கு ஏற்ற வகையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினர்.
