தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிகல் அசிஸ்டன்ட்

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிகல் அசிஸ்டன்ட்

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிகல் அசிஸ்டன்ட்


UPDATED : அக் 19, 2011 12:00 AM

ADDED : அக் 19, 2011 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2011 12:00 AM ADDED : அக் 19, 2011 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டெலிகாம் சேவையில் சர்வதேச அளவில் 7 ஆவது இடத்தில் உள்ள பி.எஸ்.என்.எல்., என்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவில் ஒயர்லைன், சி.டி.எம்.ஏ., மொபைல், ஜி.எஸ்.எம்., மொபைல், இன்டர்நெட், பிராட்பேண்ட், விசாட், போன்ற தொலைத்தொடர்பு சார்ந்த பல்வேறு சேவைகளை தருவதில் இந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது.

இந்தியாவில் இயங்கும் பிரம்மாண்டமான பொதுத் துறை நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. இதன் பாட்னா மையத்தில் 171 டெலிகாம் டெக்னிகல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேவைகள்:
பி.எஸ்.என்.எல்.,நிறுவனத்தின் டெலிகாம் டெக்னிகல் அஸிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்க 31.10.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 3 ஆண்டு படிக்கக்கூடிய இன்ஜினியரிங் டிப்ளமோவை டெலிகம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், ரேடியோ, கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், ஐ.டி., ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் படிப்பை முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதர விபரங்கள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/க்கான டி.டி.,யை ""A.O. (B&A), BSNL, C.G.M.T. Patna" என்ற பெயரில் எடுக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும். பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 31.10.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் சுயவிலாசமிட்ட ஸ்டாம்ப் ஒட்டிய கவர்களையும் இணைக்க வேண்டும். முழுமையான தகவல்களை அறிய இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.

முகவரி:
A.G.M., (Estt),
C/O The Chief General Manager Telecom,
Bihar Telecom Circle,
Sanchar Sadan, Budh Marg,
Patna - 800 001.

இணையதள முகவரி: www.bihar.bsnl.co.in

விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 31.10.2011

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us