தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய தேர்வு முறை: எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை விளக்கம்

புதிய தேர்வு முறை: எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை விளக்கம்

புதிய தேர்வு முறை: எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை விளக்கம்


UPDATED : அக் 19, 2011 12:00 AM

ADDED : அக் 19, 2011 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2011 12:00 AM ADDED : அக் 19, 2011 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய தேர்வு முறையை அறிமுகப்படுத்தியது.

இந்த தேர்வு முறையால் அதிக மாணவர்கள் தோல்வி அடைந்ததையடுத்து, புதிய தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் மனு தாக்கல் செய்தனர்

இந்த வழக்கு விசாரணையின்போது எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அளித்த பதில் மனுவில், மருத்துவ தொழில் செய்ய உரிய தகுதியை மாணவர்களுக்கு உருவாக்குவதை உறுதி செய்யும் வகையில் மருத்துவ பல்கலைக்கழகங்களின் தேர்வு முறை இருக்க வேண்டும் என்தை இந்திய மருத்துவ கவுன்சில் முக்கிய கருத்தாக கொண்டுள்ளது. எனவே மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் தேர்வு முறையில் சிறிய மாற்றத்தை செய்தோம். இது இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளுக்கு முரணானது அல்ல.

ஒரு பாடத்தில் இரு பிரிவுகளிலும் சேர்த்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி பெறலாம் என்றால், ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி மனப்பாடம் செய்து தேர்ச்சி பெற்று விடுவார்கள். ஆனால் இந்த புதிய முறையால் இரண்டு பிரிவிலும் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களது மருத்துவ தொழிலுக்கு நல்லது.

இந்த மாற்றம் பற்றி தேர்வு நடத்துவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது. புதிய தேர்வு முறை பற்றி அவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கு முன்பே தெரியும். தேர்வு எழுதிய 3,176 மாணவரக்ளில் 925 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்தனர். தோல்வி அடைந்தவர்களிலும் 3 முதல் 5 சதவீத மாணவர்களே இந்த புதிய முறையை எதிர்க்கிறார்கள். மீதமுள்ள 95 சதவீத மாணவர்கள் இந்த தேர்வு முறையை ஏற்றுள்ளார்கள். எனவே, பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மருத்துவப் பல்கலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us