UPDATED : அக் 20, 2011 12:00 AM
ADDED : அக் 20, 2011 10:22 AM
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஊழியர்களை தேர்வு செய்வதற்கு, நாடு முழுவதும், ஒரே நாளில், ஒரே மாதிரியான தேர்வை நடத்தும். கடந்த 16ம் தேதி, ஸ்டெனோகிராபர் தேர்வு நடந்தது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், சென்னையில் இரண்டு மையத்தில் தேர்வு எழுதினர். வழக்கமாக தேர்வின்போது, ஏ, பி, சி, டி, என, நான்கு விதமான வினாத்தாள்கள் பயன்படுத்தப்படும். இவ்வினாத்தாள்களில் ஒரே மாதிரியான வினாக்களே இருக்கும். ஆனால், வினாக்கள் இடம் மாறியிருக்கும். கடந்த 16ம் தேதி நடந்த தேர்வில், நான்கு விதமான வினாத்தாள்களிலும், வெவ்வேறு விதமான வினாக்கள் இடம் பெற்றிருந்தன. உதாரணமாக, ஒரு வினாத்தாளில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, எவ்வளவு மெஜாரிட்டி பெற்றார் என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது. மற்றொரு வினாத்தாளில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எவ்வளவு மெஜாரிட்டி பெற்றார், என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது. இவ்வாறு, விதவிமான வினாத்தாள்களால், சிலருக்கு கேள்விகள் எளிதாகவும், சிலருக்கு கடினமாகவும் அமைய வாய்ப்புள்ளது. கட் ஆப் மதிப்பெண்களை கணக்கிடுவதும் கடினம். எனவே, 16ம் தேதி நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் என, தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, காஞ்சிபுரத்திலிருந்து தேர்வு எழுதிய மாணவர்கள், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு மனு அனுப்பியுள்ளனர். சென்னையில் உள்ள மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, அங்கிருந்த அதிகாரிகள்,
