தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2012ல் மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு இல்லை

2012ல் மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு இல்லை

2012ல் மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு இல்லை


UPDATED : அக் 20, 2011 12:00 AM

ADDED : அக் 20, 2011 12:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2011 12:00 AM ADDED : அக் 20, 2011 12:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியா முழுவதும் மருத்துவ மேற்படிப்பில் மாணவர்களை சேர்க்க பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை செய்வதற்கான கால அவகாசமும், ஊழியர்களும் இல்லாத காரணத்தால் இந்த திட்டம் 2012ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்பதால் இம்முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு மருத்துவ முறைகளும், மருத்துவப் படிப்புகளும் உள்ளன. மருத்துவப் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் மேற்கொண்டு முதுகலை பட்டப்படிப்பை படிக்க விரும்புவார்கள். இவர்களுக்கு பொதுவான ஒரு நுழைவுத் தேர்வினை நடத்தி அதில் பெறும் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவ சேர்க்கையை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

இதற்காக அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையில், மருத்துவ மேற்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான கட்டமைப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. பொது நுழைவுத் தேர்வு நடத்துவதென்றால், 2012ம் ஆண்டு துவக்கத்தில் நடத்தப்பட வேணடும். அதற்குள் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான வசதிகளை செய்ய கால அவகாசமும் இல்லை, போதுமான ஊழியர்களும் இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தது.

இந்த அறிக்கையைத் தொடர்ந்தே மத்திய அரசு பொது நுழைவுத் தேர்வு முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

தேசிய தேர்வு வாரியம் 2013ம் ஆண்டில் இருந்து பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும். தேர்வு வாரியத்தின் சுய கட்டமைப்பு மற்றும் ஊழியர்களைக் கொண்டு இந்த தேர்வு நடத்தும் வகையின் அதனை விரிவுபடுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலர் கூறியுள்ளார்.

முன்னதாக, 2012ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் மருத்துவ மேற்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வினை நடத்த மருத்துவ கவுன்சில் ஆப் இந்தியா திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us