தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு

மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு

மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு


UPDATED : அக் 21, 2011 12:00 AM

ADDED : அக் 21, 2011 11:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2011 12:00 AM ADDED : அக் 21, 2011 11:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு காரைக்காலில் நடந்தது.

காரைக்கால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மேனிலைப்பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்தது.

இதன் நிறைவுவிழா, காரைக் காலை சேர்ந்த திருநள்ளாறில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பா.கீதா தலைமை தாங்கி பேசினார்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 17 அரசு மற்றும் தனியார் மேனிலைப்பள்ளிகளில் இந்த வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளஸ்-2 மாணவ-மாணவிகள் தங்களது மேற்படிப்பு குறித்த சந்தேகங்களை கேட்டு அறிந்து கொண்டு பயனடைந்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விழாவில், மேனிலைப்பள்ளி படிப்பை முடித்த பின்னர் மாணவ-மாணவிகள் தங்களுக்கு விருப்பமான வேலைவாய்ப்புகள் உள்ள பாடப் பிரிவுகளில் கல்லூரி படிப்பினை தொடருவதற்கான பல்வேறு தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை செந்தில்நாதன் வழங்கினார். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி கணிதத்துறை தலைவர் சிவராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் துணை முதல்வர் ஜி.நடராஜன் வரவேற்றார். முடிவில் வேலைவாய்ப்பு தகவல் அதிகாரி விநாயகமூர்த்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us