தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேரள ஐகோர்ட் பணியிடங்கள்

கேரள ஐகோர்ட் பணியிடங்கள்

கேரள ஐகோர்ட் பணியிடங்கள்


UPDATED : அக் 21, 2011 12:00 AM

ADDED : அக் 21, 2011 02:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2011 12:00 AM ADDED : அக் 21, 2011 02:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கேரள ஐகோர்ட் 1956ல் நிறுவப்பட்டது. எர்ணாகுளத்தில் இது நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பே இந்த கோர்ட்டின் வேர்கள் ஊன்றத் துவங்கிவிட்டன. இப்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க கேரள ஐகோர்ட்டில் 49 உதவியாளர்களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேவைகள் என்னென்ன:
கேரள ஐகோர்ட்டில் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பையோ அல்லது முதுநிலை பட்டப் படிப்பையோ அல்லது கேரள பல்கலை கழகங்களால் அங்கீகரிக்கப்படும் சட்டத்தில் பட்டப் படிப்பையோ முடித்திருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினராக இருந்தால் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இத்துடன் கம்ப்யூட்டரில் செயல் திறன் பெற்றிருந்தால் நல்லது.

ஊதியம் எப்படி:
கேரள ஐகோர்ட்டில் உதவியாளராகப் பணி நியமனம் பெற்றால் மாதம் ரூ.7 ஆயிரத்து 990 முதல் ரூ.12 ஆயிரத்து 930 வரை ஊதியம் பெறலாம்.

தேர்ச்சி முறை:
கேரள ஐகோர்ட்டின் மேற்கண்ட காலி இடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் நிரப்பட்டமிடப்பட்டுள்ளது.

இதர விபரங்கள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.200/க்கான டி.டி.,யை ஏதாவது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 'Registrar General, High Court of Kerala' என்ற பெயரில் எர்ணாகுளத்தில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.

இதன் பின்பகுதியில் தவறாமல் உங்கள் பெயர், மற்றும் முகவரியைக் குறிப்பிட வேண்டும். டி.டி.,யை எடுத்த பின்னர் அந்த விபரங்களுடன் ஆன்லைனில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டுடன் டி.டி., சமீபத்திய பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் இதர இணைப்புகளையும் சேர்த்து பின் வரும் முகவரிக்கு 11.11.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

முகவரி:
The Registrar General,
High Court of Kerala, Ernakulam,
Kochi - 682 031Kerala

விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 11.11.2011

இணையதள முகவரி: http://www.hckrecruitment.nic.in/assistant2011/assistant_gen_2011/ASSISTANT-2011%20NOTIFICATION.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us