தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய மருத்துவ முறை கலந்தாய்வு: 121 இடங்கள் நிரம்பின

இந்திய மருத்துவ முறை கலந்தாய்வு: 121 இடங்கள் நிரம்பின

இந்திய மருத்துவ முறை கலந்தாய்வு: 121 இடங்கள் நிரம்பின


UPDATED : அக் 22, 2011 12:00 AM

ADDED : அக் 23, 2011 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2011 12:00 AM ADDED : அக் 23, 2011 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளான இந்திய மருத்துவ முறை படிப்புகளில் மாணவர்களை சேர்க்க அக்டோபர் 21ம் தேதி முதல் கலந்தாய்வு நடந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை நடந்த கலந்தாய்வில், சென்னையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 50 இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை பெற்றுவிட்டனர். இதுவரை 121 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். தொடர்ந்து கலந்தாய்வு நடந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் உள்ள 26 சேர்க்கை இடங்களும், சென்னையில் உள்ள அரசு சித்தா மருத்துவக் கல்லூரியில் உள்ள 50 சேர்க்கை இடங்களும், இயற்கை மற்றும் யோகா படிப்பில் 20 இடங்களும், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 இடங்களும், திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதிக் மருத்துவக் கல்லூரியில் 50 இடங்களும், அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் உள்ள 50 இடங்களும் என அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 296 இடங்களிலும் மாணவர்களை சேர்க்க சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 17 தனியார் இந்திய மருத்துவ முறை கல்லூரிகளில் 65 சதவீத இடம் அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும். இந்த மொத்த இடங்கள் 530 ஆகும். இவற்றுக்கும் சேர்த்து கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

விண்ணப்பித்த அனைவருமே கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய மருத்துவ முறை ஹோமியோபதி துறை இணை இயக்குநர் ராமலஷ்மி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us