தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடலூரில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி

கடலூரில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி

கடலூரில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி


UPDATED : அக் 24, 2011 12:00 AM

ADDED : அக் 24, 2011 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2011 12:00 AM ADDED : அக் 24, 2011 10:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.வி.ஆர்., அகாடமி வழங்கும் தினமலர் நாளிதழ் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தி அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் கருத்துரை வழங்கப்படுகிறது.

கடலூர், மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 8.30 மணிக்கு 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும், மதியம் 1 மணிக்கு பிளஸ் 2 வகுப்புகளுக்கும் நடந்தது. காலை 7 மணி முதல் மாணவ, மாணவிகள் குவியத் துவங்கினர்.

நிகழ்ச்சியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்திற்கு புதுச்சேரி சுப்ரமணிய பாரதியார் பள்ளி ஆசிரியை பூங்குழலி பெருமாள், ஆங்கிலத்திற்கு வளவனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மூர்த்தி, கணிதத்திற்கு புதுச்சேரி சேலியமேடு வாணிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வீரப்பன், அறிவியலுக்கு பண்டசோழநல்லூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பசுபதிராஜன், சமூக அறிவியலுக்கு விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாலு ஆகியோர் தேர்வு குறித்து கருத்துரைகள் வழங்கினர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆங்கிலத்திற்கு கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி முதல்வர் நடராஜன், கணிதத்திற்கு புதுச்சேரி மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மைய ஆசிரியர் ஸ்ரீதரன், கம்ப்யூட்டர் சயின்சுக்கு கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மோகன்குமார், இயற்பியலுக்கு புதுச்சேரி மாவட்ட பயிற்சி மைய ஆசிரியர் பூபதி, வேதியியலுக்கு விழுப்புரம் புதுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சீனுமணி, தாவரவியலுக்கு தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முத்துகுமரன், விலங்கியலுக்கு கடலூர் ஏ.ஆர். எல்.எம்., மெட்ரிக் பள்ளி ஆசிரியர் சுந்தர், பொருளியலுக்கு கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி ஆசிரியர் இலியாஸ் டேவிட், வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியலுக்கு புதுச்சேரி என்.கே.சி.,மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சிவராமரெட்டி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஜெயித்துக்காட்டுவோம், உடம்பும் மனசும், மாணவிகளுக்கு மட்டும் உள்ளிட்ட புத்தகங்கள், நோட்டு, பேனா வழங்கப்பட்டது. மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்கள் அஜய், ஜோபிரதீப், புனித அன்னாள் பள்ளி மாணவி நித்யா ஆகியோருக்கு தினமலர் நாளிதழ் டி.வி. ஆர்., நினைவு பரிசு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us