‘தமிழக பொறியியல் கல்லூரிக்கு ஜப்பான் குழுவினர் பாராட்டு’
‘தமிழக பொறியியல் கல்லூரிக்கு ஜப்பான் குழுவினர் பாராட்டு’
UPDATED : செப் 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
விழுப்புரம்: தமிழக பொறியியல் கல்லூரிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக ஜப்பான் குழுவினர் பாராட்டியதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் பேசினார்.
விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரி புதிய வகுப்புகள் துவக்க விழாவில், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவகர் பேசியதாவது:
தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள ஆறு பொறியியல் கல்லூரிகளில் விழுப்புரம், திண்டிவனம் ஆகியன சிறப்பாக உள்ளது. தற்காலிகமாக ஆரம்பித்துள்ள பொறியியல் கல்லூரியில் அனைத்து விதமான வசதிகளும் காணப்படுகிறது. உள் கட்டமைப்புகளும் சிறப்புடன் உள்ளது.
உலக அளவில் தமிழகத்தில் தான் அதிக பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டு முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில் தமிழகம் வந்த ஜப்பான் குழுவினர், தமிழகத்தில் உள்ள பொறியியில் கல்லூரிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக பாராட்டினர். 4.5 லட்சம் மாணவர்களை கொண்டு எப்படி செயல்படுகிறீர்கள் என ஆச்சரியப்பட்டனர்.
அதிக பொறியியல் கல்லூரிகள் துவங்கி வேலை வாய்ப்பிற்காக அதிக தொழிற்சாலைகளும் துவங்கியுள்ளதால், வேலை வாய்ப்பும் பெருகும். துரிதமாக வளர்ச்சி அடைய ஆட்டோ மொபைல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் வெளிநாட்டு கம்பெனிகள் துவங்கி வேலை வாய்ப்புகளும் உருவாகிறது.
ஐ.டி., தொடர்பான கம்பெனிகள் அதிகமாக உருவாகும். முன்பு பெங்களூரூ முதலிடத்தில் இருந்தது. தற்போது சென்னை முதலிடம் வகிக்கிறது. இங்கு நியமித்துள்ளவர்கள் எம்.இ., டாக்டரேட் முடித்தவர்கள்.
உங்களுக்கு நல்ல வாய்ப்பு. அனுபவம் வாய்ந்தவர்கள் உள்ளதால் சிறப்பாக கல்வி பயில மிகச் சிறந்த வாய்ப்பு உள்ளது. இவ்வாறு துணை வேந்தர் டாக்டர் மன்னர் ஜவகர் பேசினார்.