தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனிதவள மேலாண்மை டிப்ளமோ படிக்கலாம்

மனிதவள மேலாண்மை டிப்ளமோ படிக்கலாம்

மனிதவள மேலாண்மை டிப்ளமோ படிக்கலாம்


UPDATED : அக் 24, 2011 12:00 AM

ADDED : அக் 24, 2011 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2011 12:00 AM ADDED : அக் 24, 2011 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மனிதவள படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இத்துறையில் முதுநிலை டிப்ளமோ இன்டர்நேஷனல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் (ஐ.எம்.ஐ.) கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது.

ஐ.எம்.ஐ. கல்வி நிறுவனத்தில் தற்போது நிர்வாகம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறையில் 2 வருட முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கு 2011-12ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

கேட் அல்லது ஜிமேட் நுழைவுத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நவம்பர் 18ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் மற்றும் சேர்க்கை விதிமுறைகள் குறித்த விவரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள www.imi.edu இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us