தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டாசு விழிப்புணர்வு : பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

பட்டாசு விழிப்புணர்வு : பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

பட்டாசு விழிப்புணர்வு : பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்


UPDATED : அக் 25, 2011 12:00 AM

ADDED : அக் 25, 2011 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2011 12:00 AM ADDED : அக் 25, 2011 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகள், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்திருப்பதாவது:

* சுற்றுச்சூழலுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல், பயனுள்ள விதத்தில் தீபாவளி கொண்டாட, மாணவர்கள், அவர்களது பெற்றோருக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் அதிக ஒலி, மாசுபட்ட வாயுக்கள், குப்பையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், ரோடுகளில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு, கார்பன்-டை-ஆக்சைடு, கார்பன்- மேனாக்சைடு, சல்பர்-டை-ஆக்சைடு நச்சு வாயுக்களால் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு பாதிப்பு, விபத்துகளால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் நிலையை கருத்தில் கொண்டு, மாணவர்கள் செயல்பட வேண்டும்.

* அதிக ஒலி, நச்சு வாயுக்கள் நிறைந்த பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* பட்டாசு வெடிக்கும் போது, பெற்றோர் துணையுடன், விபத்தில்லாமல் வெடிக்க வேண்டும்.

* வீடுகள், ரோடுகளில் தேங்கும் குப்பையை, உடனடியாக அகற்ற வேண்டும்.

* இரவு 10 மணிக்கு மேல், பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* இதை, பள்ளி காலை வழிபாட்டு நேரத்தில், மாணவர்களுக்கு அறிவிப்பு செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us